2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இரணைமடுக்குளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, மூவரடங்கிய  குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமித்தார்.

யாழ். பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண  விவசாயப் பணிப்பாளர்  சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு சடுத்தியாக உயர்ந்த போதும், குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதால் இந்த வெள்ளப் பாதிப்புகள்  ஏற்பட்டது. இதற்கமைய, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவே, இவ்விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .