Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.
தந்தையார் முச்சக்கர வண்டி ஓடுனராகவும் தாயார் குடும்ப பெண்ணாகவும் கொண்ட பெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை ஏடு தொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இவ்விடயம் குறித்து ஊட சந்திப்பொன்றை பெற்றோர் புதன்கிழமை(03) முன்னெடுத்திருந்த துடன் குறித்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலைஉலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதர்சன் வினோத்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago