2025 ஜூலை 16, புதன்கிழமை

இரண்டாம் தவணைக்காக 11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கும்

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே மாதம் 10ஆம் திகதி வரை திறக்கப்படமாட்டாது என்றும் அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவும் அபாயம் காரணமாக, அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே, பாடசாலையை 11ஆம் திகதி மீள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .