2021 ஜூலை 31, சனிக்கிழமை

இரத்தோட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Kogilavani   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன 

மாத்தளை இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில், கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார் என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரகள் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட மீன்சந்தைக்குச் சென்று வந்த நபரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நபர் சிகிச்சைக்காக லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருடன் தொடர்பைப் பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மேற்படி நபரின் குடும்பத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .