Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவப்பு வர்ணச் சாயம் கலந்த சிவப்பு அரிசி, மலையகத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் இவ்வாறான அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட அரிசி மாதிரிகள் சந்தையில் உள்ளதா என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் திடீர் சோதனை செய்தனர்.
இதன்போது அரிசியில் சிவப்பு வர்ணம் கலக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அரிசியானது கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிசிகளை கொள்வனவு செய்யும்போது அவதானமாக இருக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் பணித்துள்ளனர்;.
கலப்படம் செய்த அரிசிகளை மக்கள் கொள்வனவு செய்து உட்கொள்ளும் போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இவ்வாறான அரிசிகளை கொள்வனவு செய்யும்போது மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago