2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

இரவில் வரும் அதிகாரிகளுக்கு ஆதரவளியுங்கள்

Freelancer   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு

யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யானைக்கால் நோயைப் பொறுத்தவரை, ஒரு நோயாளி அறிகுறிகளுடன் வரும்போது, அவருக்கு நோய் ஏற்பட்டு 10, 15 அல்லது 20 வருடங்கள் கடந்துவிடுகின்றன.

ஒரு நோயாளி, காலம் கடந்தே அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொள்ளப்படும் விசேட இரத்தப் பரிசோதனைகள் மூலமே இந்த நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X