2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இரவுக் கேளிக்கை விடுதியில் கைகலப்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இருவரின் மகன்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவமொன்று, கொழும்பு நட்சத்திர ஹோட்டலொன்றில் கடந்தவார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரான உபாலி பியசோமவின் மகளின் பிறந்தநாள் விருந்தின் போதே, இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக கொள்ளுப்பிட்டிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி கஹட்டபிட்டியவின் மகனின் ஏவலினால், ஐ.தே.கவின் மற்றோர் அரசியல்வாதியின் மகனும் ஐ.தே.க எம்.பியுமான கவிந்த ஜயவர்தன தாக்கப்பட்டார் என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவுக் கேளிக்கை விடுதி போன்ற பகுதியில் நடந்த ஆடம்பர விருந்தே சண்டைக்களமாகியது. இதன்போது, தளவாடங்கள் எறியப்பட்டு உடைந்து போயின. எனினும், பொலிஸ் தலையீடு காரணமாக, சண்டையிட்டுக் கொண்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் சமாதானமாகினர் என விருந்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.

கைகலப்பு முடிந்ததன் பின்னர், உடைந்த பாத்திரங்கள், விருந்து மேசைப் பொருட்கள் என்பவற்றுக்காக ஒரு பெரும் தொகை 'பில்', விருந்தை ஒழுங்கு செய்தவரிடம் கொடுக்கப்பட்டது.

இருதரப்பினரும், தமக்கிடையே குற்றஞ்சாட்டாமல் தமக்கிடையே சமாதானம் செய்து கொண்டனர். எனினும், ஹோட்டல் நிர்வாகம்;, சண்டையில் விளைந்த நட்டத்தைக் கட்டவேண்டுமென உறுதியாகக் கூறிவிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X