S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவ்பொத்தான- துட்டுவௌ பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ வீரர் கொழும்பு- மோதரை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய பின்னர் கடந்த 9 ஆம் திகதி ஹொரவ்பொத்தான துட்டுவௌ பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் 10 ஆம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அசெலா திசானநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடன் தொடர்பினைப் பேணியவர்களையும் அவர் சென்று வந்த இடங்களையும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .