2026 மே 02, சனிக்கிழமை

இருவேறு இடங்களில் இரண்டு கொலைகள்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(20) இரவு தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இதன்போது கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்துள்ள பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 27 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று(20) இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .