Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர்.
தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
"உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.
குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
4 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
1 hours ago
1 hours ago