2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நாளைக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பதவிப்பிரமாண நிகழ்வு நாளை 9ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் அன்றுகாலை 10.30க்கு இடம்பெறும்.

இந்த வைபவத்தின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மேலும் அறுவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக 45 பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர்களில் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 27பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச்சேர்ந்த 18பேரும் அடங்குவதாக தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .