Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
R.Tharaniya / 2025 மே 20 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை 19 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பீ.எம் கொலன்னே, நியூயோர்க்கிற்கான தூதுவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான தூதுவர் ஆர்.எம். மஹிந்ததாச ரத்நாயக்க, பாகிஸ்தானுக்கான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, ஜப்பான் நாட்டுக்காக பேராசிரியர் பி. ஜானக குமாரசிங்க, ஐக்கிய அரபு அமீரகத்திற்காக பேராசிரியர் அருஷா குரே, ஐக்கிய இராச்சியத்திற்காக எஸ்.டி.என்.யூ சேனாதீர ஆகியோர் விரைவில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களாகப் புறப்பட உள்ளனர்.
புதிய தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்காக செயற்படுத்த எதிர்பார்த்துள்ள விடயங்கள் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், பிரதமர் தூதுவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிவிவகார அமைச்சின் மனிதவளம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் சுமித் தசநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago