2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

இலங்கையில் வாகன விற்பனையில் திடீர் மாற்றம்

Freelancer   / 2025 டிசெம்பர் 27 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மூன்று மாதங்களுக்குள் சுங்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளாவிடின் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை தளர்த்துமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய மோசமான வானிலை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக வாகன விற்பனை மந்தகதியில் உள்ளதால், இந்த அபராதச் சுமை இறக்குமதியாளர்களைப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X