Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், போரை ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ திங்கட்கிழமை (02) அன்று தெரிவித்தார்.
தற்போதைய சூழல் குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (02) அன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாகப் பகைமையைக் கைவிட்டு, உலகளாவிய அமைதியை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார்..
மத்திய கிழக்கு பிராந்தியம் இலங்கையின் பொருளாதாரத்துடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான பிராந்தியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 10 லட்சம் (1 million) இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றன என்று தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வான்பரப்புகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், இலங்கையர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் விசா காலத்தை 14 நாட்களுக்குக் கட்டணமின்றி நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மேலதிக தகவல்களுக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago