2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 வீடுகளை திறந்து வைத்த முதல்வர்

Editorial   / 2025 ஜூலை 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

·         மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

·         இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 729 வீடுகள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (07)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம்,

 

17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின்   தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் தம்மம் பட்டி, தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருது நகர் மாவட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .