2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, உதவி ஆளுநர் சி. அமரசேகர, மற்றும் உதவி ஆளுநர் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் முறையே 24 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதியமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .