Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, அன்றைய தினத்தில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை மாலை 5.30 மணி வரை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன்,சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மற்றுமொரு பாராளுமன்ற அமர்வு தினமொன்றில் இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
19 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
35 minute ago