2026 மே 21, வியாழக்கிழமை

dd

இலங்கை ரூபாயின் பெறுமதி சரிவு

Mayu   / 2026 மே 21 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக இன்று (மே 21) மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டின் தற்போதைய இறக்குமதி செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் டொலருக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளமை போன்றவையே இந்த ரூபாய் மதிப்பிழப்பிற்கு முதன்மைக் காரணங்களாகப் பொருளாதார வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

டொலரின் இந்த திடீர் விலை உயர்வு காரணமாக, வரும் நாட்களில் உலகச் சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விலைகள் உள்நாட்டில் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X