Freelancer / 2025 ஜூன் 28 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago