2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் இறையான்மைக்கு நிரந்தர ஒத்துழைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஜனநாயகம், இறையான்மைக்கு நிரந்தரமாக ஒத்துழைப்பு வழங்குவதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையின் 72ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ அறிக்கையொன்றை வெளியிட்டே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருங்கிய நட்புறவு நாடு, பங்குதாரராக இலங்கையின் சுதந்திரத் தினத்துக்கு அமெரிக்கா வாழ்த்துவதாகவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் செழிப்பு, சமாதானம், பொருளாதாரம் ​அபிவிருத்தி, பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடனான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .