2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கையின் சனத்​தொகை கணக்கெடுப்பு 2021 இல் முன்னெடுக்க திட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த வீட்டுவசதி மற்றும் மக்கள் தொகை தொடர்பான கணக்கெடுப்பானது 2021ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான  பட்டியலைத் தயாரிக்கும் வேலைத்திட்டங்கள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 வருடத்துக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இந்த சனத்தொகை கணக்கெடுப்பானது இறுதியாக 2012ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டதுடன், சுமார் 30 வருடத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு என முழு நாட்டையும் உள்ளடக்கி இந்த சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த கணக்கெடுப்புக்கு அமைய 52,67,000 வீட்டு வசதிகளும், 20. 4 மில்லியன் மக்களும் இலங்கையில் வாழ்வதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .