Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து வேல்முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சுரேஷ், ஆறுமுகம், முத்துக்குமார், மணிகண்டன், ஜெயசீலன், வேலு, முத்து இருளாண்டி, முகம்மது பக்ருதீன், ரங்காசாமி ஆகியோர் கடந்த ஜூலை 25-ம் திகதி கடலுக்குச் சென்றனர். அன்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
9 பேர் மீது வழக்கு: அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, 9 மீனவர்களையும் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதவான் கஜநிதிபாலன், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 9 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளின் உரிமையாளர்களும் செப்.14-ம் திகதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் விடுதலையான 9 மீனவர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை சனிக்கிழமை (19) வந்தடைந்தனர். தொடர்ந்து 9 பேரையும் மீன்வளத் துறையினர் தனி வாகனம் மூலம் மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
10 minute ago
26 minute ago