R.Maheshwary / 2021 மார்ச் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள 'சினோபாம்'; கொரோனா தடுப்பூசிகள், இலங்கையிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் கோரிக்கைகமைய, சினோபாம் தடுப்பூசிகளை சீனர்களுக்கு ஏற்ற தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசர பாவனைக்காக தெரிவு செய்யப்பட்ட சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய சீனாவின் தடுப்பூசி அந்நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுவதால், இலங்கையில் வசிக்கும் சீனர்களுக்கு அதனை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றார்.
இதேவேளை சினோபாம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை நேற்று(20) அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago