Janu / 2025 ஜூன் 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2002 ஆம் ஆண்டின் 34 ஆம்இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை வான்பரப்புக்குள் இடம்பெறுகின்ற விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்களை புலனாய்வு செய்யும் பொறுப்பு அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், 2010 ஆம்ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச விமான சேவைகள் அமைப்பின் (ICAO) சரியான தொழிற்பாட்டுக் கண்காணிப்பு கணக்காய்வின் போது விமானங்களின் திடீர் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு செய்வதற்கான சுயாதீன செயன்முறையொன்று இல்லாமை பற்றிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதற்கமைய, சுயாதீன நிறுவனமாக இலங்கை திடீர் விமான விபத்துக்களை புலனாய்வு செய்யும் பணியகமொன்றைத் தாபிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது சட்டவரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு இன்னும் சில ஏற்பாடுகள் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளமையை அந்தந்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கிணங்க, குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago