2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகர் சனத்

Freelancer   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உப்புல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .