Simrith / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது என்று சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
நேற்றைய (20) நிலவரப்படி, இந்த ஆண்டு மொத்தம் 40,538 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 44.3% பேர் மேல் மாகாணத்திலும், 13.9% பேர் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் காணப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை காரணமாக அதிகரிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) எச்சரிக்கிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ள மாவட்டங்களாக வைத்தியர் சமரவிக்ரம அடையாளப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், டெங்கு பரவல் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் பெரும்பாலானவை இரத்தினபுரியில் நிகழ்ந்துள்ளன.
இந்தக் காலகட்டத்தில் காய்ச்சல், உடல் வலி, தசை வலி, வாந்தி அல்லது குமட்டல் போன்றவற்றை அனுபவிக்கும் எவரும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வைத்தியர் சமரவிக்ரம அறிவுறுத்தினார்.
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago