2026 மே 14, வியாழக்கிழமை

dd

இலங்கை வர காத்திருக்கும் ரஷ்ய பயணிகள்

R.Maheshwary   / 2021 மே 26 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளின் வருகைக்கான தற்காலிக தடை நீக்கப்பட்டப் பின்னர், குறைந்தது 2500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் உள்ளதாக ரஷ்யாவுக்கான  முன்னாள் இலங்கைத் தூதுவர், உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து இதற்கான அனுமதியைப் பெற்ற பின்னரே, ரஷ்யா சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர உத்தேசதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் மற்றும் இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் ரஷ்யாவின் தலைநகரம் மொஸ்கோவுக்கும்  கொழும்புக்கும்  இடையே, வாரத்திற்கு  குறைந்தது ஒரு விமான சேவையை முன்னெடுக்கவும் குறித்த திட்டத்தின் கீழ், வாரத்துக்கு குறைந்தது 275 பயணிகளை அழைத்து வருவது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .