Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அரசியல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை, வெளிநாடுகளுக்கு இல்லையென, எதிர்க்கட்சித் தலைவர், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒழுக்கத்தை பாதுகாக்கக் கூடிய தலைவரொருவர் நியமிக்கப்பட வேண்டும். தேர்தலில் நாம் வெற்றிப் பெற வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டு மக்கள் அழிவடைந்து விடுவர். கடந்த காலங்களில் இடம்பெற்றத் தேர்தல்களில் தன்னைத் தோற்கடிக்க வெளிநாடுகள் ஆற்றிய கடமைகள் தனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இம்முறையும் அவ்வாறு நடந்துக்கொள்ளலாம். எனவே வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. எமது நாட்டு அரசியல், உள்விவகாரங்களில் தலையிட எனவே தலையிட வேண்டமென அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
22 minute ago
42 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
49 minute ago
2 hours ago