2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை

Simrith   / 2023 ஜூலை 17 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் இலங்கையானது ஜூன் மாத இறுதியளவில் 8 வேலைத்திட்டங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் 33 வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் எவ்வாறு வினைத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் “வெரிட்டே“ நிறுவனத்தின் மூலம் IMF Tracker’ என்ற நிகழ்நிலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.

(அறியப்படாதவை (Unknown)  எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வேலைத்திட்டங்கள் குறித்த சரியான தரவுகள் வெளியிடப்படாதவையாகும்.)

2023 மே மாதத்தில் 4 ஆகவிருந்த தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் முழுமைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களின் எண்ணிக்கையானது 2023 ஜூன் மாதத்தில் 8 ஆக உயர்வடைந்துள்ளதாக வெரிட்டேவின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக அமைச்சரவை ஒப்புதலைப் பெறுதல், ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை இயற்றுதல், அரசுக்கு சொந்தமான 52 முக்கிய நிறுவனங்களின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு திட்டமிடல் போன்றவையும் இவற்றில் உள்ளடங்கும்.

இலங்கை அரசாங்கம் 2023ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்துடன் செயற்படுத்த இணங்கிய உறுதிமொழிகளின் மூலம் நிறைவேற்றிய, நிறைவேற்றத் தவறிய, இன்னும் நிலுவையிலுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் மேலதிக முழுமையான தகவல்களைப் பெறவும்  https://manthri.lk/ta/imf_tracker என்ற வலைத்தளத்தை அணுகவும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .