2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கைக்கு 31 ஆவது இடம்

George   / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் உலகளாவிய இளைஞ​ர் அபிவிருத்திச் சுட்டியில் 183 நாடுகளில் இலங்கை 31ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் வெளியான புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ​பொதுநலவாய நாடுகளுக்குள் இலங்கை 7ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த ஆய்வு முடியின்படி, 133ஆவது இடத்தில் இந்தியாவும் 77ஆவது இடத்தில் நேபாளமும் உள்ளது.

2016 ஆம் ஆண்டின் இளைஞ​ர் அபிவிருத்திச் சுட்டியில் முதலிடத்தை ஜேர்மன் பெற்றுள்ளதுடன் இரண்டாவது இடத்துக்கு டென்மார்க் தெரிவாகியுள்ளது. அவுஸ்திரேலியா, 03ஆவது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளதுடன் பிரித்தானியா 5ஆவது இடத்தில் உள்ளது.

சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் எடுத்து 15 முதல் 29 வயதான இளைஞர்களிடம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .