2025 மே 17, சனிக்கிழமை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று நீதிமயமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆணைக்குழுவை இந்தவாரமளவில் கலைத்துவிடுவார் என்று அறியமுடிகின்றது.

இதேவேளை,அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்டதன் பின்னரே அந்த ஆணைக்குழுவுக்கு இதர உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதுவரையிலும் தற்போதைய தலைவரான தில்ருஷி விக்கிரமசிங்க பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .