Freelancer / 2024 நவம்பர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்பட்ட 25 முதல் 30 இல்லங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.
முன்னுரிமைக்கு ஏற்ப அந்த இல்லங்கள் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
மொத்தமுள்ள 108 இல்லங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்திலிருந்து 40 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் பதிவிடங்களைக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என்றார். (a)
16 minute ago
45 minute ago
9 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
9 hours ago
10 May 2026