Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 நவம்பர் 07 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (28) பாடசாலையில் அவர் தங்கியிருந்தஅறையில் இருந்து புதன்கிழமை (06) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதன் காலை பாடசாலை வரவு பதிவு இயந்திரத்தில் வருகையை பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்கு சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தி உள்ளார். அப்போது தனது இடமாற்றம் தொடர்பாக மாகாண ஆளுநரைச் சந்திக்க திருகோணமலை நகரிற்கு செல்ல உள்ளதாக மாணவர்களுக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.
இதே வேளை இவரது மனைவி தமது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை,எனவே எங்கே எனது கணவர் உள்ளார் என்று பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.
இதை அடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்வையிட்ட போது அவர் உயிரற்ற நிலையிலும்,உள்ளாடை மற்றும் காற்ச்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும்,கால்களில் இரத்த காயங்களுடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவானின் உத்தரவிற்கு இணங்க சடலம் சட்டவைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
23 minute ago
36 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago
47 minute ago
1 hours ago