Janu / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த கொத்மலை நகரம் அழகான மலைகளால் சூழப்பட்ட மிக பாதுகாப்பான மற்றும் அழகான பகுதி என்பதுடன் அங்கு மெய்யான கிராமவாசிகள் வசிக்கும் பல வரலாற்று கிராமங்கள் உள்ளன.
அவ்வாறான அழகான நகரத்தில் அமைந்துள்ள ரணமுனே பீலி,கொத்மலை மாவெல நகரத்தின் அருகில் உள்ள மதிப்புமிக்க தனித்துவமான இடமாகும். இந்த பீலி, துட்டகெமுனு மன்னனின் ஆட்சிக் காலமான கி மு 137 மற்றும் 161 இல் இருந்த ஒரு பீலியாகும்.
தற்போது கொத்மலை என்பது ஒரு ஊரின் பெயர் என்றாலும், இலங்கை மன்னர் ஆட்சிக் காலத்தில், கொத்மலை பகுதி ஒரு நாடாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இந்த ரணமுனே பீலி அமைக்கப்பட்டுள்ளதுடன் இளவரசர் துட்டகைமுனு 16 ஆண்டுகளாக கொத்மலை, மாவெல பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போது, அவர் இந்த ரணமுனே பீலியில் தான் குளித்துள்ளார் என வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது.


32 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
3 hours ago