2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இவையெல்லாம் அரசியல் விளையாட்டு தான்

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வாக்களித்தது ஒரு அரசியல் விளையாட்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 “அரசாங்கம் தன்னைக் காப்பாற்றாததால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாக அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். அவரை அப்படி வாக்களிக்கச் செய்தது ஒரு அரசியல் தந்திரமாகும்.

போதகர் ஜெரோம் வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிட்ட சம்பவமும் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்பட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் (அரகலய) பற்றி பயப்படுவது எனக்குத் தெரியும். அதனால் தான் கற்பழிப்பு மற்றும் விபசார விடுதி நடாத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அரகலய உறுப்பினர்கள் மீது பழி போடுகிறார்கள்”, என அவர் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X