Freelancer / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்குள் நுழைய முன்னர், புறப்படும் நேரத்தில் பரிசோதனை முடிவு மறையாக இருந்தால் (தொற்றுக்குள்ளாகாத), விமான நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
புறப்படும் நாட்டில் 72 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago