Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள 21 மில்லியன் மக்களுக்கும் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை வைத்தியசாலை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளை மையப்படுத்தி, ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்குள் இந்த அட்டை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்றே இலங்கையில் இந்த அட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதன்மூலம் யாராவது ஒரு நோயாளியின் நோய் தொடர்பான முழுமையான அறிக்கை இந்த அட்டையில் உள்ளடக்கப்படும் என்பதால், குறித்த நபர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலுமுள்ள வைத்தியரிடம் விரைவாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் 71ஆவது மாநாட்டையொட்டி, ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
3 hours ago
5 hours ago