Editorial / 2025 மே 27 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில், மே.16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியை கைது செய்ய கொட்டாஞ்சேனை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீடொன்றுக்கு அருகில் இருந்த42 வயதுடைய ஆண், 70 வயதான பெண் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியின் என அறியப்பட்டவரின் முகத்தை பொலிஸார் வரைந்து அனுப்பியுள்ளனர். 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும், 05அடி 09 அங்குலம் உயரமுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வரைதலில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் 071 8591571, 071 8596386 அல்லது 074 0253623 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026