2021 ஜூன் 21, திங்கட்கிழமை

உடனடியாக மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

J.A. George   / 2021 மே 13 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டத்தின் அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு, கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு, தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு, கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு


இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு, திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, குருவிட்ட கிராம உத்தியோகத்தர பிரிவிற்கு உட்பட்ட தெல்கமுவ பிரிவின் நகரப் பகுதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .