Editorial / 2026 மே 15 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. அந்த நபர் தன்னைத்தானே தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த நபர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டதைக் கண்ட எரிபொருள் நிலைய ஊழியர்கள், மின்னல் வேகத்தில் செயற்பட்டு அவரைத் தடுத்துக் கட்டுப்படுத்தினர். இதனால் ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஹோமாகம பொலிஸார், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்துக் காவலில் எடுத்தனர்.
அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மன உளைச்சல் காரணமாக இச்செயலில் அவர் ஈடுபட்டாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026