2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நலம் பாதிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 11 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் மூவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் ஒருவர், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் மற்ற இருவரும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அறியமுடிகின்றது.

தங்களை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், நேற்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்றாவது நாளாக தமது போராட்டத்தைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X