2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உப-பொலிஸாருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

30ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகக் கோரி, 20ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் உப-பொலிஸ் பரிசோதகர், எதிர்வரும் 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீயினால் எரிந்து சாம்பாராகிபோன முச்சக்கரவண்டிக்குக் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, அதன் உரிமையாளருக்கு பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்கே அவர், இலஞ்சம் பெற்றார் என்று அறியமுடிகின்றது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பொலிஸ் உப- பரிசோதகர், ஓய்வுபெறுவதற்கு ஒரு மாதம் இருக்கின்ற நிலையிலே இந்தச் சம்பவத்தில் அவர், சிக்கிக்கொண்டதாக பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X