Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Simrith / 2024 மே 15 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனப் போர் தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர், இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூர உரிமை உண்டு என்று கூறியதுடன், சம்பூரில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு எனவும் எம்.பி. தெரிவித்தார்.
போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
5 hours ago