R.Tharaniya / 2025 நவம்பர் 16 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடலில் இருந்து கரை ஒதுங்கிய உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (15) அன்று மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான சனிக்கிழமை(15) அன்று கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று கிடப்பதை கண்டு மீனவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவினருடன் சென்ற பொலிஸார் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago