Freelancer / 2026 மார்ச் 25 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 டொலர்களாகக் காணப்படுகிறது.
அதன்படி, இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 11.31 சதவீத வீழ்ச்சி என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. R
7 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Apr 2026
04 Apr 2026