Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Simrith / 2025 மே 07 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உலக வங்கிக் குழுத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்தக் சந்திப்பின் போது, இலங்கையின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை முன்னுரிமைப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டன.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவது உட்பட குறுகிய கால வெகுமதிகளை அடையாளம் காண்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள்
மற்றும் சமீபத்திய கொள்கை முயற்சிகள் குறித்தும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago