2025 மே 22, வியாழக்கிழமை

உள்ளூராட்சி மன்றத்தேர்தலை மார்ச்சில் நடத்து: ஜே.வி.பி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய தேர்தல் முறையின் கீழோ அல்லது புதிய முறைமையின் கீழோ, எதிர்வரும் மார்ச் மாதத்தில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு, ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'புதிய முறைமையின் கீழ், எதிர்வரும் மார்ச் மாதம், தேர்தலை நடத்தமுடியாவிடின், பழைய முறையிலாவது தேர்தலை நடத்தவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து நீடித்து, உள்ளூராட்சி

மன்றங்களுக்கான தேர்தலை காலந்தாழ்த்துவது, ஜனநாயகவிரோதச் செயலாகும் என்று தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை ஜே.வி.பி முற்றுமுழுதாக கண்டிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X