Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் க பொ த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியரின் கண்காணிப்புடன் பரீட்சை எழுதினார்.
இச் சம்பவம் வியாழக்கிழமை (20) அன்று இடம்பெற்றது.
காலையில் பரீட்சைக்கு சென்ற மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டியை கல்லூரி வளாக சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்திய போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு தீண்டியது
உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியில் மந்திகையில் உள்ள பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாணவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவசர சிகிச்சையின் பின்னர் ஆம்புலன்ஸ் வண்டியில் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு மாணவன் பரீட்சை எழுத வைக்கப்பட்டார். அம்மாணவன் பரீட்சை எழுதும்போது வைத்தியசாலை டாக்டர் ஒருவரும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் அம்மாணவனின் உடல் நிலையை பரீட்சை மண்டபத்தில் பிரசன்னமாக இருந்து கண்காணித்தனர்.
வைத்திய கண்காணிப்பில் பரீட்சை எழுதிய மாணவன் பரீட்சை முடிவடைந்ததும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 minute ago
32 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
44 minute ago
1 hours ago