Editorial / 2019 ஜூலை 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின், அடுத்த விசாரணை நடவடிக்கைகளின் போது, அதனை நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதென, தெரிவுக்குழுவின் தலைவர் ஜே.எம். ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்ற விசேடத் தெரிவுகுழுவில் சாட்சியமளிப்பதற்காக, புலனாய்வு பிரிவின் பிரதான அதிகாரிகள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களின் விசாரணைகளின் போது, ஊடகங்களுக்கு அனுமதியளிக்காமலிருக்க தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனரென்றும் ஆனந்த குமாரசிறி கூறியுள்ளார்.
அத்துடன், சாட்சியாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரும் போது, அவர்களை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கும் இடமளிக்கப்படாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தப்படுவதால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுவதாகவும் ஆனந்த குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago