2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்

Freelancer   / 2026 ஜனவரி 25 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நேற்று (24)  நடைபெற்றது.

சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்பு இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

சுகிர்தராஜனின் திருவுருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X